தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா.. 2 மணி நேரத்தில் ஜனாதிபதி ஒப்புதல் : சந்தேகம் கிளப்பும் எதிர்க்கட்சிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2024, 10:03 pm
Prex
Quick Share

தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா.. 2 மணி நேரத்தில் ஜனாதிபதி ஒப்புதல் : சந்தேகம் கிளப்பும் எதிர்க்கட்சிகள்!!

தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அருண் கோயலின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அருண் கோயல் பதவி விலகியுள்ளதால் தேர்தல் ஆணையர் காலிப்பணியிடங்கள் 2 ஆக உயர்ந்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், அருண் கோயல் பதவி விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் செயலாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாள் 2022 நவம்பர் 19ஆம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் அருண் கோயல்.

இந்தநிலையில் திடீர் ராஜினாமா கடிதம் அனுப்பியதும் 2 மணி நேரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதை ஏற்றுக்கொண்டுள்ளதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், விபரீதமான ஒரு திட்டம் இல்லாமல் பாஜக இவ்வாறு செய்யமாட்டார்கள். சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகமாக இருக்கிறது.

பாஜக சொல்வதை இவர் கேட்கவில்லையா? அல்லது பாஜகவுக்கு இவரைவிட சமத்தாக இருக்கக்கூடிய ஒரு அதிகாரி தேவைப்படுகிறாரா? என்பது தெரியவில்லை. ஏதோவொரு பிளானை முன்வைத்துதான் இவ்வாறு செய்கிறார்கள் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

Views: - 64

0

0