ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்புமனு தாக்கல்.. 10ம் தேதி வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்!!

Author: Babu Lakshmanan
8 February 2023, 8:58 am
Quick Share

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக கூட்டணி சார்பில் தென்னரசும் போட்டியிடுகின்றனர். அதேபோல, தேமுதிக, நாம் தமிழர் கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த ஜனவரி 31ம் தேதி முதல் வேட்புமனுக்கல் தாக்கல் செய்து வந்தனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்ய குவிந்தனர். நேற்றுடன் 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வரும் 10ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

Views: - 395

0

0