எம்ஜிஆரின் கால் தூசுக்கு வருவாரா முதலமைச்சர் ஸ்டாலின்? ஆர்எஸ் பாரதி கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி..!!

Author: Babu Lakshmanan
17 September 2022, 12:58 pm
Quick Share

சென்னை : திமுக மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாத அரசாக இருப்பதாகவும், எம்ஜிஆர் கால் தூசுக்கு வருவாரா மு.க ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்

திராவிடத் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவானது தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி சென்னை தேனாம்பேட்டை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஜெயக்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மின் கட்டண உயர்வு குறித்து ஆர்.எஸ்.பாரதியின் பொறுப்பிலிகளாக பதில் அளித்துள்ளார். சொத்து வரி, குடிநீர் வரி, ஆவின் பொருள்கள் வரை என பல்வேறு விலைகளை உயர்த்தி இருக்கின்றனர்.மக்கள் கஷ்டப்படுகின்றனர் மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாத அரசாக இருக்கிறது.

அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் கரிஷ்மாட்டிக் தலைவர் என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்துக்கு, எம்ஜிஆரின் அழகென்ன, நடையென்ன, உடையென்ன, அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. அவரை ஸ்டாலினோடு ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம்?. அவருக்கு ஸ்டாலின் ஈடாவாரா? எம்ஜிஆருடன் ஸ்டாலினை ஒப்பிட்டு பேசுவநு நகைப்புக்குறியது. எம்ஜிஆர் கால் தூசுக்கு வருவாரா மு.க ஸ்டாலின், என்றும் விமர்சனம் செய்தார்.

Views: - 356

0

0