முருங்கை மரத்துக்கு சேலை காட்டினாலும் ஜொல்லு விடுவார் உதயநிதி… ஜெயக்குமார் கடும் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
30 August 2023, 2:15 pm
Quick Share

எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மழுங்கடிக்கவே காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்ததாகவும், அங்கன்வாடி மையங்களில் சத்துணவு திட்டத்தை மறைத்து காலை சிற்றுண்டி திட்டம் என எழுதுவதாகவும், எம்.ஜி.ஆர் படத்தை மறைப்பது சட்டவிரோதம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்ட பலகைகளை அகற்றிவிட்டு காலை உணவு திட்ட பலகைகளை வைப்பதை கண்டித்து மாநகராட்சி ஆணையரிடம் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் புகார் மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ;- எம்.ஜி.ஆர் இந்த திட்டத்தை கொண்டு வந்த போது ஐ.நா. சபையே பாராட்டியது. இதை பிச்சைக்கார திட்டம் என கருணாநிதி விமர்சித்தார். பிச்சை எடுத்தாவது இந்த திட்டத்தை செயல்படுத்துவேன் எனக்கூறி திட்டத்தை செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர். குழந்தைகளின் பசியை போக்கும் மகத்தான திட்டத்தை மழுங்கடிக்கக்கூடிய வகையில், காலை சிற்றுண்டி திட்டத்தை திமுக கொண்டு வந்துள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் அக்‌ஷயாபாத்திரா அமைப்பின் மூலம் காலை உணவுத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. காலை உணவு திட்டத்திற்கு பிள்ளையார்சுழி போட்டதே எடப்பாடி தலைமையிலான அரசு தான். சென்னையில் 358 மையங்களில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் என்ற பெயர் பலகையை மறைத்து காலை சிற்றுண்டி திட்டம் பலகை வைக்கப்படுகிறது. இது ஒரு வக்கிரமான போக்கு.

இந்த மாநிலத்தின் ஓனர் போல முதல்வர் செயல்படுகிறார். நாட்டு மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்துவதை விட்டுவிட்டு, தனது தந்தையின் புகழை பாடிக்கொண்டிருக்கிறார். எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும், காலை சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் முதல்வர் முகமாக உள்ளது. எம்.ஜி.ஆர். படத்தை மறைப்பது சட்டவிரோதம். மீண்டும் படத்தை வைக்காத பட்சத்தில் நாங்களே எழுதுவோம்.

கடந்த 2 ஆண்டுகளில் அதிமுக கொண்டுவந்த திட்டங்களையே பெயர் மாற்றம் செய்து முதல்வர் திறந்த வைத்துகொண்டிருக்கிறார். சர்காரியா கமிஷன் குற்றவாளி என்று சொன்ன கருணாநிதி பேரன் உதயநிதி, இன்பநிதி, ஸ்டாலின் ஆகியோர் முருங்கை மரத்திற்கு சேலை கட்டினால் கூட ஜொல்லுவிடுவார்கள். வாயை கொடுத்து புண்ணாக்கி கொள்ளக்கூடாது.

காவல் துறையே அடிவாங்கும் அளவிற்கு இன்றைய நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கு சரியில்லை. அதிமுக ஆட்சியில் மிடுக்காக இருந்த காவல்துறை இன்று ஏண்டா காக்கிசட்டை போட்டோம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கட்சி ஆட்களை அடக்கி வைக்காததால், அவிழ்த்துவிட்ட மாடுகளை போல் அனைத்தையும் மெய்ந்துகொண்டு இருக்கிறார்கள். இதனை முதல்வர் கண்டிக்காமல் ஊக்கப்படுத்துகிறார்.

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பெயிலில் எடுத்தவர்கள் திமுகவினர். திமுகவினருக்கும், கொடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என விளக்க வேண்டும். இதற்காக தான் கொடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை கேட்கிறோம். கொடநாடு வழக்கை காண்பித்து எங்களை பூச்சாண்டி காட்ட முடியாது. பெரும்பாலான திமுகவினர் நில அபகரிப்பு வழக்கில் உள்ளார்கள். தேர்தல் நேரத்தில் ரூ.100 சிலிண்டர் விலை குறைப்பு எனக்கூறிவிட்டு நிறைவேற்றவில்லை, என்றார்.

Views: - 276

0

0