என்னது, மாட்டுத்தாவணியில் டைட்டில் பார்க்கா..? எல்காட் நியாபகமிருக்கா..? திமுகவுக்கு ஆர்.பி உதயகுமார் கொடுத்த ரிமைண்டர்..!!

Author: Babu Lakshmanan
17 September 2022, 5:17 pm

மதுரை : மதுரையில் ஏற்கனவே எல்காட் மூலம் உள்ள 2 தகவல் தொழில்நுட்ப பூங்கா முழுமையாக செயல்படுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- தமிழகத்தில் 2.25 இலட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு பேரடியாக உள்ளது.

மதுரைக்கு டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்தது விளம்பர அறிவிப்புதான். கள ஆய்வு நடத்தாமல் டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்து உள்ளார். மதுரையில் ஏற்கனவே எல்காட் மூலம் உள்ள 2 தகவல் தொழில்நுட்ப பூங்கா முழுமையாக செயல்படுத்தவில்லை.

போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரியானது அல்ல. அடிப்படை கட்டமைப்பு இல்லாத இடத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்காமல் டைடல் பார்க் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கண்ணின் பார்வையை அழித்து விட்டு ராஜபார்வை என சொல்லவது போல டைடல் பார்க் அறிவிப்பு உள்ளது. திமுகவின் முப்பெரும் விழா ஸ்டாலினின் புகழ் பாடும் விழாவாக அமைந்தது. டைடல் பார்க் கட்டுவது சிறுவர் பூங்கா அமைப்பது போல அல்ல. அனைத்து கட்டமைப்புகளையும் உள்ளடக்கி டைடல் பார்க் அமைக்க வேண்டும்.

இந்து இனத்தை அவதூறு பேசி வரும் அ.ராசா மீது திமுக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒற்றை தலைமையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. அதிமுகவில் அதிமுகவிற்கு எதிராக உள்ளவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் இனி வரும் எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வெற்றி பெறும்,” என கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?