Free Fire விளையாட்டால் 23 வயது இளைஞர் தற்கொலை.. காரணமான நண்பர்கள்… வாட்ஸ் அப்பில் Status வைத்து விட்டு விபரீத முடிவு…!!

Author: Babu Lakshmanan
7 June 2022, 2:20 pm

Free fire ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 23 வயது இளைஞர், அவரது தாயாரின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கரூர் மாநகராட்சி உட்பட்ட சுங்ககேட் பகுதியை அடுத்து உள்ளது சிவசக்தி நகர். இந்தப் பகுதியில் சத்தியபாமா என்பவர் தனது 23 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். தந்தையை பிரிந்து வாழும் சஞ்சய் 12ம் வகுப்பு படித்து முடித்து விட்டு, தனியார் கல்லூரியில் கேட்டரிங் படிப்பை படித்து வந்தார்.

அந்த கல்லூரியில் படிப்பை தொடர முடியாமல் வெளியேறி, மற்றொரு தனியார் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் படித்து வந்துள்ளார். கல்லூரிக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், கடந்த ஒரு ஆண்டு காலமாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார்.

சக நண்பர்கள் சொல்லும் சாப்பாடு பரிமாறுவது, குல்ட் தயாரிப்பு வேலைக்கு போவது என சிறு சிறு தினக் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். 12ம் வகுப்பு படிக்கும் போதே free fire விளையாட்டில் ஆர்வம் கொண்ட சஞ்சய் பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்த பிறகு, அந்த ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரனோ பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதை அடுத்து, இளைஞர் தொடர்ந்து ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இரவு பகலாக விளையாடி நிறைய பணம் சேர்த்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கிடைக்கின்ற வேலைகளை உடன் வரும் சக நண்பர்கள் சென்று வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது உடன் இருந்த ஒரு நண்பன் பேசுவதற்காக செல்போனை வாங்கி, சஞ்சயிடமிருந்த Free Fire-யின் user I’d மற்றும் password-ஐ திருடி தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டு செல்போன் தொலைந்து விட்டதாக கூறி ஏமாற்றியுள்ளனர். மேலும், சஞ்சயிடம் இருந்து திருடப்பட்ட user name, password-ஐ கொண்டு விளையாடுவதை பார்த்து சக நண்பர்களிடம் கூறி புலம்பியுள்ளார்.

இது நடந்து 6 மாத காலம் ஆன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக மற்றொரு user I’d, password விளையாடி வந்துள்ளதை மற்றொரு நண்பன் செல்போனில் பேசி விட்டு தருவதாக கூறி வாங்கி திருடிக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய அந்த user I’d, password, 1 லட்சம் மதிப்பு இருக்கும் என்றும், இதையும் திருடிக் கொண்டார்கள் என சக நண்பர்களுடன் புலம்பி வந்துள்ளான்.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக மன உளைச்சலில் இருந்த சஞ்சய், தனது அம்மா வேலை சென்ற நேரத்தில், அவரது புடவையை கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகி தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை திருடியதற்காக உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?