அடேங்கப்பா…ஒரே நாளில் ரூ.268.50 விலை உயர்ந்தது கமர்சியல் சிலிண்டர்: இப்போது என்ன விலை தெரியுமா?

Author: Rajesh
1 April 2022, 9:07 am
Quick Share

சென்னை: சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையில் 268.50 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2 ஆயிரத்து 119 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனம் இன்று உயர்த்தியுள்ளது.

அதன்படி, 19 கிலோ எடையுள்ள ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 268 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 406 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 268.50 ரூபாய் உயர்ந்து 2 ஆயிரத்து 406 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேவேளை, சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை 965 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டு உயபோக எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 22ம் தேதி உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 427

0

0