‘வாங்க உட்காந்து பேசுவோம்’… உச்சநீதிமன்றத்திற்கு கட்டுப்பட்ட ஆளுநர் ஆர்என் ரவி ; முதலமைச்சருக்கு அனுப்பி வைத்த முக்கிய தகவல்…!!

Author: Babu Lakshmanan
13 December 2023, 4:18 pm
RN RAvi Stalin - Updatenews360
Quick Share

மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியான நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த மசோதாக்கள் மீண்டும் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு கடந்த நவ.18ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே, மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்துவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆளுநருக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், முதலமைச்சரை அழைத்தப் பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த வழக்கு இரு வாரங்களுக்கு பிறகு மீண்டும் இன்று விசாரணைக்க வர உள்ள நிலையில், நேரில் சந்தித்துப் பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியானது. சென்னையில் மத்திய குழு ஆய்வு நடைபெற்று வருவதால், வேறு ஒருநாள் சந்திப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஆளுநரின் அழைப்பு கடிதம் நேற்று தான் கிடைத்ததாகவும், ஆளுநரை சந்தித்து பேச முதலமைச்சர் ஸ்டாலின் தயாராக உள்ளார் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு மறுபடியும் ஆளுநர் அனுப்ப இயலாது என்றும் உச்சநீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தனர்.

Views: - 214

0

0