கையில் துப்பாக்கி… வெச்ச குறி தப்பாது : ரைபிள் சுடுதலில் அண்ணாமலை.. இணையத்தில் பரவும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2023, 7:58 pm
An- Updatenews360
Quick Share

கையில் துப்பாக்கி… வெச்ச குறி தப்பாது : ரைபிள் சுடுதலில் அண்ணாமலை.. இணையத்தில் பரவும் வீடியோ!!

என் மண் என் மக்கள் என்ற முழக்கத்துடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பாதயாத்திரையை தொடங்கினார்.

மொத்தம் 168 நாட்கள் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி இரண்டாவது வாரம் சென்னையில் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார் அண்ணாமலை.

இதனிடையே தென் மாவட்டங்கள் முழுவதும் பாதயாத்திரையை முடித்த அண்ணாமலை, இப்போது கொங்கு மண்டலத்திற்குள் தனது பாதயாத்திரையை தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் நேற்று திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளிலும் பாதயாத்திரை நடத்தினார்.

திருப்பூர் மாவட்டத்தில் பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதால் நேற்றைய தினம் இரண்டு தொகுதிகளிலுமே கூட்டம் குவிந்தது. இதனிடையே உடுமலைப்பேட்டையில் இயங்கி வரும் சேரா ஷூட்டிங் அகாடமி நிறுவனத்திற்கு சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை, கையில் துப்பாக்கியை பிடித்து வச்ச இலக்கை சரியாக சுட்டார்.

ஏற்கனவே கடந்த வாரம் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தாம் 10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்தவர் எனக் கூறியிருந்தார். இதையடுத்து அவரது அந்தக் கருத்தை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் திமுகவினர் விமர்சித்து வந்தனர்.

இந்தச் சூழலில் வச்ச குறி தப்பாது என்பதை நேற்றைய தினம் அண்ணாமலை நிரூபித்துள்ளார். இதனிடையே இன்று பொள்ளாச்சியில் அவர் பாதயாத்திரை மேற்கொள்ளும் நிலையில், நேற்றே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் பேரணி சென்றனர்.

Views: - 151

0

0