ஒரே நாடு ஒரே தேர்தல் : கிடைத்தது சிக்னல்? ராம்நாத் கோவிந்த் அளித்த பரபரப்பு அறிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2023, 9:20 pm
One Election - Updatenews360
Quick Share

ஒரே நாடு ஒரே தேர்தல் : கிடைத்தது சிக்னல்? முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அளித்த பரபரப்பு அறிக்கை!!

நாட்டில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு ஆயுதமாகி வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்து ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான சிறப்பு குழு ஒன்றையும் மத்திய அரசு அமைத்தது.

அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான சிறப்பு குழு இன்று முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இந்த சிறப்பு குழு உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்கே சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே மற்றும் ஊழல் ஒழிப்பு முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த உறுப்பினர்கள் அனைவரும் இன்று நடைபெற்ற முதல் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக உயர்மட்ட குழு அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான கூட்டத்துக்கு பிறகு உயர்மட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அந்த அறிக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்துக்கள் கேட்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக இந்திய சட்ட ஆணையமும், தங்களது பரிந்துரைகளை வழங்குமாறும் ஆலோசனை குழு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சிறப்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முடிவெடுக்கும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது முதல் கூட்டத்துக்கு பிறகு உயர்மட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

Views: - 115

0

0