ரூ.3,500 கோடி முதலீட்டை திமுக அரசு நழுவ விட்டதா?…தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு!

11 July 2021, 2:01 pm
TN ₹3500 Crores - Updatenews360
Quick Share

சென்னை கோட்டை வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக அடிபடும் பெயர், (Kitex) கைடெக்ஸ்.

இதற்கான காரணத்தை முழுமையாக அறிந்து கொள்வதற்கு முன்பு இந்த நிறுவனம் பற்றிய சில முக்கியத் தகவல்கள், அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியவை.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனமான (Kitex) கைடெக்ஸ் கார்மெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் கொச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு நகரங்களில் உள்ள தொழிற் பூங்காக்களில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனது தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டிருந்தது.

Kitex Garments Ltd Recruitment 2020 - Apply for latest vacancies -  Jobalertinfo

இதற்காக கடந்தாண்டு கொச்சியில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கேரள அரசுடன் ஒப்பந்தமும் செய்து கொண்டது. இதன் மூலம் 2025-க்குள் அந்த மாநிலத்தில்
25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலையும் இருந்தது.

1992-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறது. கொச்சிக்கு அருகே கிழக்கம்பலம் என்னும் இடத்தில் இதன் உற்பத்திக் கூடங்கள் உள்ளன. இங்கே 11 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
இதை விரிவாக்கம் செய்வதற்கு கைடெக்சின் தலைவரும், அதன் நிர்வாக இயக்குனருமான சாபு ஜேக்கப் விரும்பியபோதுதான், அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்களை அவர் சந்திக்க நேர்ந்தது.

Making Infant Wear With Care Is Child's Play For India's Kitex Garments

சில மாதங்களுக்கு முன், அவருடைய ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தொடர்ச்சியாக
40 நாட்களில் தொழிலாளர் நலத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் 11 முறை அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த உற்பத்தி கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாக புகார்கள் வந்ததால் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக கேரள அரசு விளக்கம் அளித்தது.

Kitex Garments to invest US $ 1 million in US | Apparel News India

இதனால் விரக்திக்கு உள்ளான சாபு ஜேக்கப், தான் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருந்த தொழில் முதலீட்டை ரத்துசெய்து விட்டு வேறு மாநிலத்திற்கு மாற்றும் தீவிர முயற்சியில் இறங்கினார்.

“மாநிலத்தை ஆட்சி செய்யும் பினராயி விஜயன் அரசு என்னை ஒரு சதிகாரன் போலவும் கிரிமினல் குற்றவாளி போலவும் பார்க்கிறது. என்னை ஒரு நாயை விட கேவலமாக மதிக்கிறது. அதனால்தான் எனது புதிய யூனிட்டுகளை வேறு மாநிலத்திற்கு மாற்றுகிறேன். தொழில் வளர்ச்சியில் கேரள அரசு
50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. தற்போது கொச்சியில் செயல்பட்டுவரும் எங்களது தொழில் நிறுவனங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தால் அவற்றையும் வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தயங்க மாட்டேன். ஏனென்றால் எங்களை வரவேற்க பல மாநிலங்கள் காத்திருக்கின்றன” என்று கடுமையாக சாடினார்.

Hackers from China, Pakistan accessed computer network in Kerala secretariat

இதன்பின்னர், வேறொரு மாநிலத்தில் புதிய இடம் தேடும் அறிவிப்பை கடந்த மாத இறுதியில் அவர் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து தமிழகம், மராட்டியம், குஜராத், கர்நாடகம், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா உள்பட 9 மாநிலங்கள் கைடெக்ஸ் தங்கள் மாநிலத்தில் உற்பத்தி கூடங்களை அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தன.

பக்கத்து மாநிலம் என்பதால் சாபு ஜேக்கப் தமிழகத்தில் தனது தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தையிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார்.

தமிழகத்துடன் பேச்சு நடத்துவதற்கு முன்பாக அவர் கூறும்போது, “தமிழக அதிகாரிகள் எங்களை உடனடியாக தொடர்பு கொண்டு முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தனர். தொழில் தொடங்குவதற்காக பல்வேறு சலுகைகளையும் அளிப்பதாக உறுதி அளித்தனர். எனினும் இதுபற்றி நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று தெரிவித்து இருந்தார்.

Tamil Nadu CM Stalin's message of support to Covid patients- The New Indian  Express

கடந்த வாரத்தின் இறுதியில் தமிழகமும், தெலுங்கானாவும் மட்டுமே (kitex)கைடெக்ஸ் நிறுவனத்தின் முதலீட்டை யார் ஈர்ப்பது? என்ற கடும் போட்டியில் இருந்தன.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு, “எங்கள் மாநிலத்தின் வாரங்கல் நகரில் அமைந்துள்ள தொழிற்பூங்காவை வந்து பாருங்கள். உங்களுக்கு பொருத்தமான இடமாக இருக்கும்” என்று கைடெக்ஸ் தலைவர் சாபு ஜேக்கப்பிற்கு, தெலுங்கானா அரசு அழைப்பு விடுத்ததுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் விதமாக அவரை அழைத்துவர ஒரு தனி விமானத்தையும் கொச்சிக்கு அனுப்பி வைத்தது.

அதை ஏற்றுக்கொண்டு சாபு ஜேக்கப் மற்றும் அவரது நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் 4 பேர் வெள்ளிக்கிழமை அந்த விமானத்தில் ஐதராபாத் பறந்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் அனைவரும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் வாரங்கல் நகருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள தொழிற்பூங்கா சுற்றிக் காண்பிக்கப்பட்டது.

Sad to leave Kerala, I have been kicked out,' Kitex chairman as he goes to  Telangana | The News Minute

இதில் திருப்தி அடைந்த சாபு ஜேக்கப், தெலுங்கானா மாநில தொழிற்துறை அமைச்சர் ரமணா ராவை சந்தித்து பேசினார். இதையடுத்து கைடெக்ஸ் நிறுவனத்தின் முதல் யூனிட்டை
1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் அமைக்க தெலுங்கானா அரசுடன் அவர் ஒப்பந்தம் செய்துகொண்டார். இதன் மூலம் அந்த மாநிலத்தில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மீதமுள்ள 2500 கோடி ரூபாயையும் வாரங்கல் தொழில் பூங்காவிலேயே முதலீடு செய்ய தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு கைடெக்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறும்போது, “தெலுங்கானா அதிகாரிகள் தங்களது நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டனர். வரிச் சலுகை, தடையில்லா மின் விநியோகம், தண்ணீர் வசதி உள்ளிட்ட எங்களது அத்தனை கோரிக்கைகளையும் அம்மாநில அரசு ஏற்றுக் கொண்டது. தங்கள் மாநிலத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவேண்டும் என்கிற ஆர்வம் மற்ற மாநிலங்களை விட தெலுங்கானா அரசு அதிகாரிகளிடம் அதிகமாகவே காணப்பட்டது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

இதுபற்றி தமிழக அரசின் முன்னாள் உயர் அதிகாரிகள் சிலர் கூறும்போது, “கைடெக்ஸ் நிறுவனத்தை தமிழகத்துக்கு கொண்டுவருவதில் அரசு அதிகாரிகள் மிகுந்த மெத்தனமாக செயல்பட்டிருப்பது, நடந்துள்ள நிகழ்வுகளின் மூலம் தெரிய வருகிறது. இதனால் 3,500 கோடி ரூபாய், தொழில் முதலீடு தமிழகத்தை விட்டு கைநழுவிப் போய் இருப்பதும் அப்பட்டமாக தெரிகிறது.

Telangana rolls out red carpet for Kitex, delegation flown to mega textile  park in Warangal- The New Indian Express

உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்கள் 5 பேர் மாநில அரசிடம் உள்ள நிலையில் இந்த முதலீடு எப்படி பக்கத்து மாநிலமான நமக்கு வராமல் தெலுங்கானாவிற்கு சென்றது, என்பது புரியாத புதிராக இருக்கிறது? இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அரசும், அதிகாரிகளும் இனி இதுபோன்ற விஷயங்களில் மிக கவனமாக இருக்கவேண்டும்” என்று வேதனை தெரிவித்தனர்.

Views: - 188

0

0