‘இன்னைக்கு நைட் குள்ள அவன் இருக்க மாட்டான்’ : திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ… வைரலாகி வரும் ஆடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2022, 10:51 pm

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் கே.பி.சங்கர். திருவொற்றியூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் சாலை சீரமைக்கும் பணி நடந்து வந்த போது, அந்தப் பணி தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஆகியோருடன் சில நாட்களுக்கு முன்பு கே.பி.சங்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மாநகராட்சி பொறியாளரை கே.பி.சங்கர் தாக்கியதாகவும் தெரிகிறது. இத்தகவல் வெளியான நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி வருவதால் திருவொற்றியீர் மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக துரைமுருகன் அறிவிதிருந்தார்.

இந்த நிலையில் திமுக நிர்வாகிக்கே கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக எம்எல்ஏ கே.பி சங்கரின் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பட்ட அந்த ஆடியோவில், எம்எல்ஏவுடன் மறுமுனையில் பேசும் பெண் ஒருவர், நம்மளுக்குள்ள என்ன தம்பி என்று பேச தொடங்கினார், நம்மளுக்குள்ள என்ன அப்படி அவங்க அப்படி பேசுறாங்க, ஊருல இருந்து ஆள வரவைக்கற.. சொன்னா செஞ்சிருவா.. இன்னைக்கு நைட்டுக்குள்ள அவன் இருக்கறானானு பாருங்க என கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.

மேலும் நாங்க மானத்துக்காக வாழறோம், சாதிக்காக இல்லை… எங்கிட்ட சொல்லிட்டு செஞ்சிருந்தா ஒண்ணும் பிரச்சனை இல்லை. சொல்லாம கடை நடத்தியிருந்தா என்ன அர்த்தம் என அவர் பேசினார். மறுமுனையில் இருந்த பெண், 2 நாள் டைம் தரனு சொன்னீங்க.. நமக்குள்ள என்ன கொஞ்சம் பாத்து செய்யுங்க தம்பி என கூறுகிறார். ஆனால் அவரோ இல்ல கா.. நான் பாத்துக்கற விடுக்கா என பேசிவிட்டு அணைப்பை துண்டித்துள்ளார்.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக ஆட்சிக்கு வந்த பின் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் திமுக நிர்வாகிக்கு, திமுக எம்எல்ஏ கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!