ஹாட்ரிக் தோல்வி.. லிவ்விங்ஸ்டன் அதிரடியில் தவிடுபொடியான சென்னை அணி : 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2022, 11:18 pm
Punjab Won - Updatenews360
Quick Share

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 180 ரன்கள் அடித்தது. 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி களமிறங்கவுள்ளது.

15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. பிராபன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் களமிறங்கினார்கள்.

போட்டியின் தொடக்கத்திலே 4 ரன்கள் மட்டும் அடித்து மயங்க அகர்வால் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து ராஜபக்சா களமிறங்கினார். 9 ரன்கள் அடித்து அவரும் வெளியேற, பின்னர் களமிறங்கிய லிவிங்ஸ்டன், தவானுடன் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினார்.
சிறப்பாக ஆடிவந்த தவான் 33 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிவந்த லிவிங்ஸ்டன், 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என மொத்தம் 60 ரன்கள் அடித்து வெளியேரினார்.

அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்தனர். பந்துவீச்சை பொறுத்தளவில் சென்னை அணியின் ப்ரேட்டோரியஸ், க்றிஸ் ஜார்டன் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். கெய்க்வாட் 1 ரன்னில் வெளியேற, மொயின் அலி டக் அவுட் ஆனார். உத்தப்பா 13 ரன்னிலும், ராயுடு 13 ரன்னிலும் வெளியிறே அடுத்து வந்த கேப்டன் ஜடேஜா டக் அவுட் ஆனார்.

இதன் பிறகு ஷிவம் துபே மற்றும் தோனியின் நிதான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஆனால் 57 ரன் எடுத்திருந்த துபே, லிவ்விங்ஸ்டன் பந்தில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த பிராவோ டக் அவுட் ஆனார்.

நிதானமாக ஆடிய தோனி 23 ரன்களில் வெளியேற 17 ஓவரில் 121 ரன்ககளுக்கு 9 விக்கெட்டு எடுத்திருந்தது. இதன் பின்னர் வந்த வீரர்கள் சொதப்பியதால் சென்னை 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை அணி தொடர்ந்து 3வது முறையாக தோல்வியடைந்தது.

Views: - 1392

0

0