பெரியகோவிலில் சீமானை அனுமதித்தது எப்படி? வரிந்து கட்டி களமிறங்கிய ஹெச். ராஜா..!

14 February 2020, 8:22 pm
H. Raja 01 updatenews360
Quick Share

சிலை வழிபாட்டை ஒழிக்கத் துடிக்கும் ஹுமாயூனை தஞ்சை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டது எப்படி? என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளரான சீமான், பெரியார் கொள்கைகளை கடைபிடித்து வருவதாக ஒருகாலத்தில் தன்னை கூறிக் கொண்டவர். அப்போதெல்லாம் மேடைகளில் இந்து கடவுள்களை கேலி, கிண்டல் செய்து வந்தவர்.

ஆண் பெண் உறுப்பாக இருக்கும் லிங்கத்துக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபடுகிறார்கள்…. அய்யோ கருமம்டா என்றெல்லாம் மேடைகளில் பேசி, வழக்கம் போல் புஹ்ஹாஹா என்று தனக்கு தானே சிரித்துக் கொள்வார்.

பின்னர் தன்னை தமிழ் உணர்வாளர் என்று காட்டிக் கொள்ளக் தொடங்கியதும், தமிழ் கடவுளான முருகன் மீது பற்றுதல் இருப்பது போல் பேசத் தொடங்கினார். ஒருபுறம் பெரியார் வழி என்று சொல்லிக் கொண்டே, மறுபுறம் முருகனை முப்பாட்டனாக்கினார். நாளடைவில் சீமானின் மேடைப்பேச்சுகள் கேலிப்பொருளாகின. அவரது பேச்சிய கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்த தொடங்கினர்.

இந்த நிலையில் தான் தற்போது தன்னை சிவபக்தராகவும் அடையாளம் காட்டத் தொடங்கியுள்ளார் சீமான். கடந்த 5ம் தேதி தஞ்சாவூர் பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று மாலையே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவிலுக்கு சென்று, கருவறையில் அமர்ந்து தரிசனம் செய்தார்.

அவருக்கு அங்கிருந்த அதிகாரிகள், சிவாச்சாரியார்கள், மாலை அணிவித்து, பிரசாதம் தந்து ராஜமரியாதை செய்து வழி அனுப்பி வைத்தனர். இதை, சீமானே தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இந்த படங்களை பார்த்தது இந்துமத உணர்வாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு சீமான மீது பரபரப்பு பாலியல் புகாரை அளித்த ‘பிரண்ட்ஸ்’ பட நடிகை விஜயலட்சுமி, சீமானை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அதேபோல் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டவர்களும், கிறிதவரான சைமன் என்கிற சீமானை, எப்படி பெரிய கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர்.

தற்போது இந்த விவகாரத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா கையில் எடுத்துள்ளார். சீமானை தஞ்சை பெரிய கோவிலுக்குள் அனுமதித்தற்கு அவர், தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஹெச். ராஜா கூறுகையில், ‘சிலை வழிபாட்டை (சிர்க் ஒழிப்பு) ஒழிக்கத் துடிக்கும் ஹுமாயூன் (நாம் தமிழர் கட்சி) தஞ்சை பெருவுடையார் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டது எப்படி?  இந்து அல்லாதவர், இந்துமத சின்னம் அணியாதவரை கோவிலுக்குள் அனுமதித்த அறநிலையத்துறை அதிகாரியின் மீது உடனடி நடவடிக்கை தேவை என்று ஆக்ரோஷமாக பதிவிட்டுள்ளார்.

Leave a Reply