மீனவர்கள் மீது அக்கறை இருந்தால் அபராதத் தொகை அரசு செலுத்தலாமே? நீலிக்கண்ணீர் எதுக்கு? CM மீது இபிஎஸ் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2023, 1:57 pm
EPS Stalin - Updatenews360
Quick Share

மீனவர்கள் மீது அக்கறை இருந்தால் அபராதத் தொகை அரசு செலுத்தலாமே? நீலிக்கண்ணீர் எதுக்கு? CM மீது இபிஎஸ் விமர்சனம்!

தமிழக மீனவர்கள் கைது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் அந்த கடிதம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது X தள பக்கத்தில், தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கடந்த மாதம் 22-ந்தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு 2 கோடியே 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகத்தின் பொம்மை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறாராம். அபராதம் மிகவும் அதிகமானது, மீனவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டது என்று அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.

உண்மையில் தமிழக மீனவர்கள் மீது இந்த விடியா திராவக மாடல் அரசின் முதல்வருக்கு அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி விசை படகுகளை மீட்டு தர வேண்டியதுதானே?

ஒன்றிய அரசு என்று கொச்சைப்படுத்திய மத்திய அரசின் காலில் பொம்மை முதல்வர் எதற்காக விழுந்து கெஞ்ச வேண்டும்.

உக்ரைன், காசா, மணிப்பூர் நிகழ்வுக்கெல்லாம் அதிகாரமே இல்லாமல் பொங்கி நாடகமாடிய ஸ்டாலின், தமிழக மீனவர்கள் செலுத்த வேண்டிய அபராதத்தொகையை செலுத்த முன்வராதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க அபராதத்தொகையை செலுத்தும்படி அனைத்திந்திய அண்ணா தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Views: - 181

0

0