சென்னையின் குரல்வளையை பிடிக்கும் தொற்று…!!! தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!!

Author: Udhayakumar Raman
13 January 2022, 7:48 pm
Delta Plus Corona - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் மேலும் 20,911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அதன்படி தற்போது புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரவு ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 17,934 ஆக இருந்த நிலையில்,இன்று 20,911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 28,68,500 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 6,235 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்தம் 27,27,960 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,930 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 8218 பேரும், செங்கல்பட்டில் 2030 பேரும், கோவை 1162 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செயப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 241 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 29 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

Views: - 146

1

1