அகவிலைப்படி உயர்வு? தமிழக அரசு வெளியிடும் முக்கிய அறிவிப்பு : காத்திருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2023, 9:02 am

அகவிலைப்படி உயர்வு? தமிழக அரசு வெளியிடும் முக்கிய அறிவிப்பு : காத்திருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!!

மத்திய அரசு ஊழியர்களை போலலே தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு என்ற கோரிக்கையை தமிழக அரசு ஊழியர்கள் முன்வைத்து வருகிறார்கள்.

ஏற்கனவே, அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த கோரிக்கையை விடுத்திருந்தது.

அதாவது, தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்கள், ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் மத்திய அரசு வழங்கியது போல 4 சதவிகித அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை.

இப்போது, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகமும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் மாயவன் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

அதில், “மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு, இந்த ஆண்டு ஜூலையில் இருந்து கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை, இந்த ஆண்டு ஜூலையில் இருந்து கணக்கிட்டு உடனடியாக வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிதி பற்றாக்குறை, காலியிடம் நிரப்புவதில் தாமதம், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு போன்றவை நிலவுகிறது.. அரசு தங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்கவில்லை என்ற வருத்தமும் ஊழியர்களுக்கு உள்ள நிலையில், இந்த அகவிலைப்படி உயர்வு கோரிக்கையும் தற்போது சேர்ந்துள்ளது, தமிழக அரசுக்கு பெருத்த நெருக்கடியை உண்டுபண்ணி வருகிறது.

  • Seenu Ramasamy divorce reasons இளம் நடிகைகளுக்கு குறி…இயக்குனர் “சீனு ராமசாமி” விவாகரத்தின் பின்னணி… பகிரங்கமாக பேசிய பயில்வான்..!
  • Views: - 363

    0

    0