சீனியர் சிட்டிசன்கள் வாழ தகுதியற்ற மாநிலமா தமிழகம்? கொலை நகரத்தில் முதலிடம் : வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2023, 11:26 am
Senior citized
Quick Share

சீனியர் சிட்டிசன்கள் வாழ தகுதியற்ற மாநிலமா தமிழகம்? கொலைநகரத்தில் முதலிடம் : வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

2022 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக முதியோர்கள் படுகொலை செய்யப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட இந்தியாவின் குற்ற அறிக்கை தெரிவிக்கிறது.

200ஆம் ஆண்டின் போது 1,661 கொலைகளும, 765 கடத்தல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது என்றும், பெண்களுக்கு எதின குற்றங்கள் 6,630 சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரிவக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது அதிகரித்துள்ளது. 1,686 கொலைகளும், 821 கடத்தல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 8,501 சம்பவம் நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 1,690 கொலைகளும், 737 கடத்தல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 9,207 சம்பவங்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2022ல் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 514 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகம் என பதியப்பட்டுள்ளது. அதே போல சீனியர் சிட்டிசன்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் 391 வழக்குகள் பதிவாகியுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 243

0

0