G-SQUARE நிறுவனத்தில் மீண்டும் IT ரெய்டு ; சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை

Author: Babu Lakshmanan
21 March 2024, 10:38 am
Quick Share

சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை நஷ்டத்தில் இயங்கி வந்த ஜி ஸ்கொயர் நிறுவனம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இரண்டு ஆண்டுகளில் பல கோடி ரூபாய் சொத்துக்களை குவித்ததாகப் புகார் எழுந்தது. மேலும், ஜி ஸ்கொயர் நிறுவனம் ஆளும் திமுகவுக்கு நெருக்கமானர்வளுக்கு சொந்தமானது என்றும் சொல்லப்பட்டது. இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை சென்மேரிஸ் சாலையில் உள்ள ஜீ ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை, அடையாறு, அமைந்தகரை, அண்ணா நகர், உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையை தவிர்த்து பிற மாவட்டங்களில் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல, வேல்ஸ் பல்கலைக்கழக அலுவலகத்திலும், தரமணியில் உள்ள ஐடி நிறுவனம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Views: - 107

0

0