ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் : பயங்கரவாதி சுட்டுக்கொலை..!!

17 October 2020, 12:26 pm
Indian_Army_UpdateNews360
Quick Share

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான்.

அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள லார்னூ பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, கடந்த 14ம் தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply