கனிமொழியின் எட்டாக் கனி! “டார்கெட்“ தவறியதால் “அப்செட்“!!

11 September 2020, 5:50 pm
Kanimozhi - updatenews360
Quick Share

சமீப நாட்களாக திமுக எம்பி கனிமொழி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருவதற்கு ஒரே ஒரு காரணம் பொதுக்குழுவில் நடந்த ஏமாற்றம் என்று சொல்லப்பட்டு வருகிறது. பொதுக்குழுவுக்கு முன் கல கல என இருந்த கனிமொழி பொதுக்குழுவுக்கு பின் அமைதியாக இருக்க காரணம் ஒரே ஒரு பதவிக்காகத்தான் என்று கூறப்படுகிறது.

திமுகவில் எத்தனை பதவிகள் இருந்தாலும் மாநில அளவில் உள்ள பதவிக்கு அந்தஸ்து ஜாஸ்தி.. கருணாநிதி இருந்த போதே யாருக்கு மாநில அந்தஸ்து கொடுக்கலாம் என்று முன்கூட்டியே கணித்து யாருக்கும் எந்த அதிருப்தியும் வராமல் பார்த்துக்கொள்வதில் கெட்டிக்காரர்.

ஆனால் அவர் மறைந்த பிறகு மாநில பதவிகளுக்காக மூத்த தலைவர்கள் ஸ்டாலினை ஈ மொய்ப்பது போல கூடினர். அவர்கள் மட்டுமல்ல எப்படியாவது பொதுக்குழுவில் தமக்கு ஒரு மாநில அந்தஸ்தை அண்ணன் அறிவிப்பார் என கனிமொழியும் காத்திருந்தார். ஆனால் பொதுச்செயலாளர் பதவியில் துரைமுருகனும், பொருளாளர் பதவியில டிஆர் பாலுவும் நியமிக்கப்பட்டதை தவிர மற்ற பதவிகளில் பொறுப்பேற்றவர்களுக்கு இந்த பொதுக்குழு கசப்புதான்.

துரைமுருகன் என்றால் கனிவு; டி.ஆர்.பாலு என்றால் கண்டிப்பு; இந்தக் கனிவும்  கண்டிப்பும் திமுக வளர்ச்சிக்குப் பயன்படட்டும்: ஸ்டாலின் பேச்சு ...

மாநில அளவு பதிவி வேண்டும் என்று பொன்முடிக்கும் ஆசை இருந்தது. அதிருப்தியில் இருந்த ஆ.ராசாவுக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. அவர்களை சமாதானம் செய்யவே இந்த பொறுப்புகள் வழங்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதனால் கடும் அப்செட்டில் உள்ள கனிமொழி, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் பதவியும் கிடைக்கல, மாநில பதவியும் கிடைக்கல. மகளிர் அணி செயலாளர் பதவி மட்டும் வைத்துக்கொண்டு, அது கட்சி ரீதியான பதவி இல்லை என்று வருத்தப்பட்டு வருகின்றார்.

Kanimozhi: சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தோ்வு - mp kanimozhi  selected for best parliamentarian award | Samayam Tamil

டி.ஆர் பாலுவுக்கு நாடாளுமன்ற குழு தலைவர் பதவியை கொடுத்து பொருளாளர் பதவியும் கொடுத்துள்ளனர். தமக்கு எதுவும் இல்லையே என்ற வருத்தத்தில் பொதுக்குழு முடிந்ததில் இருந்து கனிமொழி அமைதியாக உள்ளார். மாநிலத்தில் அந்தஸ்து கிடைப்பது கனிமொழியின் எட்டாக்கனியாக இருந்தாலும், கடைசி நேரத்தில் அறிவாலயம் தரும் இன்பக்கனியை சுவைப்பார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 0

0

0