அறிவாலயே அரசே பதில் சொல்!, இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 எங்கே..? திமுகவைக் கண்டித்து குமரியில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்கள்..!!

Author: Babu Lakshmanan
22 January 2022, 6:25 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக பாஜகவும் திமுகவும் போஸ்டரில் மோதிக் கொள்வது வாடிக்கையாகிவிட்ட நிலையில், இன்று பா.ஜ.க வினர் ஒட்டிய போஸ்டரால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பாஜக சார்பில் பிரம்மாண்ட போஸ்டர் ஒன்று மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. அதில் பொங்கல் பரிசு தொகை ரூ 5000 எங்கே என திமுகவிற்கு பாஜகவினர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த போஸ்டரால் மாவட்ட முழுதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து, பாஜகவினருக்கு கவுண்டர் கொடுக்கும் வகையில் திமுக சார்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், ரூ.15 லட்சம் எங்கே என ஒட்டப்பட்டிருந்தது. இந்த இரண்டு போஸ்டர்களால் மாவட்டம் முழுவதும் பாஜக – திமுகவினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் திடீரென பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது .அதில் அறிவாலயே அரசே பதில் சொல்! கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி என்ன ஆச்சு?, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி என்ன ஆச்சு?, மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி என்ன ஆச்சு.? இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 என்ன ஆச்சு ? என்ற வாசகங்கள் பொருந்திய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

இதனால் மாவட்டத்தில் மீண்டும் பாஜக – திமுக வினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வெகுவிரைவில் வரும் நிலையில் திமுக – பாஜக இதுபோன்று மோதிக்கொள்வது பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Views: - 2823

0

0