கேரளாவில் விபத்தில் சிக்கிய விமானம் : 191 பயணிகளின் கதி…?
7 August 2020, 9:01 pmகேரளாவில் தரையிறங்கிய விமானம் திடீரென விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் ஊரடங்கினால் பொதுமக்கள் வீடுகளில் பெரும்பாலும் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரள மாநிலத்தில் தற்போது கனமழை கொட்டி வருகிறது. ஆங்காங்கே நிலச்சரிவு உள்ளிட்ட விபத்துக்கள் ஏற்பட்டு, உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், துபாயில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியர்களை அழைத்து வந்த விமானம், கேரளாவின் கோழிக்கூட்டிற்கு அழைத்து வந்தனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முட்பட்ட போது, கனமழையின் காரணமாக தரை சறுக்கியதால் விமானம் விபத்துக்குள்ளானது.
இதில், பயணம் செய்து வந்த 191 பேரின் கதி..? கேள்விக்குறியானது. இதையடுத்து, விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவினர் 24 ஆம்புலன்ஸ்கள் மூலம் விமான விபத்தில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.