இந்த மிரட்டல் எல்லாம் இங்க வேண்டாம்.. அப்பறம் அரசாங்கமே இருக்காது ; திமுகவுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
11 April 2023, 1:17 pm

ஆளுநரை மிரட்டும் தமிழக அரசாங்கம் இருக்க வாய்ப்பே இல்லை என்று கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஆன்லைன் ரம்மி தடை, டாஸ்மாக் உள்ளிட்டவைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் அவர் கூறும் போது ;- தமிழக ஆளுநர் நேற்று ஆன்லைன் ரம்மி தடைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆன்லைன் ரம்மியால் சொத்துக்களை இழந்தார்கள், உயிர்களையும் இழந்தார்கள். இனிமேல் அது போன்ற சம்பவம் நடைபெறாது. டாஸ்மாக் மூலம் தான் அனைத்து விதமான சமூககேடு விளங்குகிறது. டாஸ்மாக் கடைகளை அறவே மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரை குறி வைத்து தாக்கும் போக்கு உள்ளது. ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர். அரசியல் திட்டங்களுக்கு செயல் கொடுப்பவர்கள் ஆளுநர்கள். ஆளுநர்கள் இல்லாமல் மாநில அரசை எண்ணிப் பார்க்க முடியாது. மத்திய அரசுக்கு மாறான சட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதெல்லாம் அரசியல் சாசனத்தை புரியாமல் இருப்பவர்கள் பேசுவது.

சட்டமன்றத்திற்குள் முதலமைச்சர் கைகட்டி சும்மா பார்க்க மாட்டோம் என எச்சரிக்கை விடுப்பது ஆபத்தானது. கைகட்டி பார்க்க மாட்டோம் என்பது என்ன பொருள். 2021 வரையில் மோடி இலக்காக வைத்துக் காட்டினார்கள். மோடி வந்தபோது கருப்பு பலூன் பறந்தது. ஆனால், தற்போது நிறுத்தி விட்டு சரண் அடைந்துவிட்டனர். குடும்பமே சென்று மோடியை கை தூக்கி நிற்பது இவர்கள் சங்கீகளாக மாறிவிட்டார்களா..? இது குறித்து இஸ்லாமிய, கிறிஸ்துவ சகோதரர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இனி மேலும் திமுக போடும் நாடகத்தை நம்பாதீர்கள். உங்களோடு ரம்ஜான் மாதத்தில் தொப்பி போட்டு வருவார்கள் ஏமாந்து விட வேண்டாம். ஆளுநரை மிரட்டுவதை விட்டு விட வேண்டும். ஆளுநரை மிரட்டும் தமிழக அரசாங்கம் இருக்க வாய்ப்பே இல்லை. ரம்மிக்கு மது பழக்கங்களுக்கு காரணமாக இருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும்.

பெண்களை விதவையாக்குவதை நிறுத்த வேண்டும். டாஸ்மாக்கை மூட ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை. டாஸ்மார்க் கடை போல பார்களில் சட்டவிரோதமாக மது விற்கப்படுகிறது. கரூர் மூலம் நடைபெறுகிறது. எத்தனை சட்ட விரோத பார்கள் நடைபெறுகிறது என்பதை நிதித்துறை அமைச்சர் ஆய்வு செய்து சொல்ல வேண்டும். மே 15க்குள் சட்டவிரோத பார்களை செந்தில் பாலாஜி மூட வேண்டும் இல்லை என்றால் நாங்கள் மூடுவோம்.

இரண்டாவது டாஸ்மார்க் பார்களை மூட போராட்டம் நடத்துவோம். மூன்றாவதாக மது தயாரிப்பு ஆலைகளை மூடப் போராட்டம் நடத்துவோம். தனி நபர் கஜானாவிற்கு சட்டவிரோத மது விற்பனையால் வரும் பணம் போகிறது. டாஸ்மாக் கடை 6500. ஆனால் பல இடங்களில் சட்டவிரோத பார் நடைபெறுகிறது. டாஸ்மார்க் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச உள்ளேன். திமுக கூட்டணி கட்சிகளுடனும் பேச உள்ளேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!