3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்..!!

Author: kavin kumar
12 February 2022, 8:58 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக2,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று புதிதாக 2,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,33,966 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 17 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,904 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 11,154 பேர் குணமடைந்தனர். இதுவரை நலம்பெற்றவர்களின் எண்ணிக்கை 33,48,419 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 47,643 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் அதிகபட்சமாக சென்னையில் 546 பேருக்கும், கோவையில் 523 பேருக்கும், செங்கல்பட்டில் 238 பேருக்கும், திருப்பூரில் 169 பேருக்கும், சேலத்தில் 146 பேருக்கும், ஈரோட்டில் 152 பேர் என கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Views: - 983

0

0