தீயும் மண்ணும் தின்னும் உடம்பை பிறர்க்களித்து வாழ்வளிக்க முன்வருவோம் : முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2023, 5:52 pm
CM sTaln - Updatenews360
Quick Share

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதுடெல்லியில் நடைபெற்ற 13வது இந்திய உறுப்பு தான தின விழாவில், சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி முன்னிலையில், சிறந்த மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (SOTTO) விருதை தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வழங்கினார்.

உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் மாநில விருதை தமிழகம் பெற்று, மத்திய சுகாதார அமைச்சக தரவரிசையில் மாநிலம் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தது.

2008 ஆம் ஆண்டு உறுப்பு தானம் திட்டம் தொடங்கியதில் இருந்து, 1,706 நன்கொடையாளர்களிடமிருந்து 6,249 முக்கிய உறுப்புகளை அரசு மீட்டெடுத்துள்ளது.

இந்நிலையில், உடலுறுப்பு தானம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் “உடலுறுப்பு தானம் என்பது தமிழ்நாட்டில் ஓர் இயக்கமாவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகப் பரந்த மனதுடைய மக்களும், மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பும் இங்கு இருப்பதால்தான் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளோம்.

தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம்! அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Views: - 187

0

0