மீண்டும் தள்ளிப்போகிறதா உள்ளாட்சி தேர்தல்…? உச்சநீதிமன்றத்தில் புதிய மனு… அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு..!!

Author: Babu Lakshmanan
4 September 2021, 11:53 am
Tamil Nadu Election Commission - Latest Tamil Nadu News
Quick Share

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. இதனால், கடந்த முறையில் நடந்த தேர்தலின் போது இந்த மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படவில்லை.

விடுபட்டு போன 9 மாவட்டங்களுக்கு செப்.,15ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தேர்தலுக்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வெளியீடு மற்றும் வாக்குப்பதிவுக்கான நேரம் நீட்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இனி தேர்தல் தேதியை அறிவிப்பது மட்டுமே பாக்கி என்ற நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே, 2 முறை அவகாசம் கோரியிருந்த நிலையில், தற்போது 3வது முறையாக அவகாசம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

இதனிடையே, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6ம் தேதி நண்பகல் 12 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகே எஞ்சிய மாவட்டங்களுக்கான தேர்தல் நடைபெறுமா..? என்பது குறித்து முடிவு தெரிய வரும்.

Views: - 295

0

0