உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி… இனி இந்தியாவின் எதிர்காலம் ஐஜேகே கையில் : ரவி பச்சமுத்து அதிரடி..!!

Author: Babu Lakshmanan
29 January 2022, 3:47 pm
Quick Share

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள இந்திய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவரான ரவி பச்சமுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்

முதல்கட்டமாக 60 இடங்கள். பிற இடங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருப்பதாகவும், அதனை தொடர்ந்து 3 கட்டமாக வேட்பாளர்கள் பெயர்களை அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார். இந்திய ஜனநாயக கட்சி நாகரீகமான அரசியலையும், நேர்மையான அரசியலையும் நேர்மையான அரசியலையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய வகையில் ஒரு அரசியல் மேற்கொள்ளும்.

தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க மாட்டோம் எனவும், மக்கள் மாற்றத்திற்கு விரும்பும் நிலையிலும், சிறிய தயக்க நிலையிலேயே இருப்பதாகவும், எனினும் இந்திய ஜனநாயக கட்சியை பொறுத்த வரை தொடர்ந்து நாங்கள் வெற்றி தோல்விகளை பொருட்படுத்தாமல் மக்கள் எங்களை ஏற்கும் வரை தொடர்ந்து போட்டியிடுவோம், என தெரிவித்தார்.

பொதுவாக அரசியலில் ஒருவருக்கு ஒருவர் திட்டி அரசியல் செய்வது வழக்கம். இந்திய ஜனநாயக கட்சியை பொறுத்தவரை அதிலிருந்து மாறுபட்டு மற்றவர்களை விமர்சனம் செய்யாமல், அதே நேரத்தில் அவர்கள் புண்படாத வகையில் அவர்களை விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொள்வோம், என தெரிவித்தார். எங்களுடைய வேட்பாளர்கள் மக்களுக்கு என்ன சேவை செய்வோம் என என்பதை கூறி பிரச்சாரம் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

50% பெண்களுக்கு வாய்ப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கொடுத்தால், அவர்கள் தங்களது தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வகையில் எங்களது கொள்கை மற்றும் நிலைப்பாடாக உள்ளது எனவும், இந்திய ஜனநாயக கட்சி வரும் காலங்களில் இந்திய அளவில் ஆட்சியை பிடிக்கும், தெரிவித்தார். மக்கள் மத்தியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு அமைதியான ஆதரவு அலை இருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த பேட்டியின்போது கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் முதன்மை அமைப்புச் செயலாளர் எஸ்எஸ் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Views: - 701

0

0