ஆட்டத்துக்கு நாங்க ரெடி… மீண்டும் அதே சின்னம் : உள்ளாட்சி தேர்தலில் எடுபடுமா சீமானின் வியூகம்..!!

Author: Babu Lakshmanan
21 September 2021, 4:25 pm
SEEMAN - Updatenews360
Quick Share

சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே, எஞ்சிய 9 மாவட்டங்களுக்கு செப்.,15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகள் என இருகட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,6ம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,9ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். செப்.,23ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. செப்.,25ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். பதிவாகும் வாக்குகள் அக்.,12ம் தேதி எண்ணப்படுகிறது.

இந்தத் தேர்தலில், அதிமுக, திமுக கட்சி இரு அணிகளாக போட்டியிடுகின்றன. சட்டப்பேரவை தேர்தலின் போது, திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய தேசிய லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிகள், இந்த முறையும் திமுகவின் தயவிலேயே களமிறங்குகின்றன. அதேவேளையில், அதிமுக கூட்டணியில் பாஜக, தமாக மட்டுமே இடம்பெற்றுள்ளன. பாமக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

பாமகவை போல சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயகாந்தின் தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டி.டி.வி.தினகரனின் அமமுக ஆகிய கட்சிகளும் தனித்தே களம் காண்கின்றன. இதன் மூலம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Views: - 136

0

0