காமராஜர் முதலமைச்சரானதைப் பார்த்து பொறாமைப்பட்டவர் காந்தி : காங்., மேடையில் திமுக ஆதரவு பேராசிரியர் பரபரப்பு பேச்சு..!!

Author: Babu Lakshmanan
16 July 2022, 1:39 pm

திருவள்ளூர் : கர்மவீரர் காமராஜர் முதல்வரான போது அது பொறுக்காமல் மகாத்மா காந்தியே அவருக்கு புறம்பாக பலமுறை பேசியுள்ளார் என்று திமுக ஆதரவு பேராசிரியை பர்வீன் சுல்தானா பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கர்மவீரர் காமராஜர் 120வது பிறந்த நாள் கருத்தரங்கம் நேற்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், பேராசிரியர் பர்வீன் சுல்தானா காமராஜர் ஆட்சி முறை பற்றி சிறப்புரையாற்றினர்.

பின்னர் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் பண முடிப்பினை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, கருத்தரங்கில் பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான டாக்டர் ஜெயக்குமார் பேசியதாவது :- அடுத்த தேர்தலில் நாம் வாக்களிக்க போகிறோமோ என்பது சந்தேகமே என்றும், பிரதமரின் மோடியின் செயல்பாடுகள் சர்வாதிகார போக்காக உள்ளது என்றும் கூறினார்.

மேலும், அவர் சர்வாதிகாரியாக மாறுவதற்காக அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் ஆர்எஸ்எஸ் காரர்களை சேர்க்கிறார் என்றும், ஆர்எஸ்எஸ் சங்கிகள் ராணுவத்தில் நுழைவதை காங்கிரஸ்காரர்கள் உயிரை கொடுத்தாவது தடுக்க தயங்கக் கூடாது, என்றார்.

பின்னர், பேசிய பேராசிரியர் பர்வீன் சுல்தானா பள்ளி, கல்லூரிகள் பல திறந்து பலரின் கல்விக்கண் திறந்தவர் காமராஜர் என்றும், சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பிடிக்கும் என்றும் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவரே காமராஜர் எனவும் தெரிவித்த அவர், பாராளுமன்றத்தில் தேசத்தில் ஊழல் இருக்கக் கூடாது என கூறி இருந்தால் பாராட்டி இருப்பேன் என்றும், ஊழல் செய்கிறீர்கள் என யாரையும் சொல்லாதீர்கள் எனக் கூறுவது வேதனை அளிப்பதாக கூறினார்.

தொடர்ந்து, தமிழினத்தைச் சேர்ந்த காமராஜர் முதல்வரானதால் மகாத்மா காந்தியே
அவருக்கு புறம்பாக பலமுறை பேசியுள்ளார் என தெரிவித்தார்.

திமுக ஆதரவு பேராசிரியர் பர்வீன் சுல்தானா காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மகாத்மா காந்தி பற்றி பேசியது கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?