மலைக்கா அரோராவுக்கு கொரோனா பாதிப்பு: அபார்ட்மென்ட்டுக்கு சீல்..

6 September 2020, 10:51 pm
Quick Share

டெல்லி: இந்தி நடிகை மலைக்கா அரோராவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தி திரையுலக பிரபலங்கள் இடையே கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் பாதிப்புகள் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்தி திரைப்பட நடிகர் அர்ஜூன் கபூர் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இன்று தெரிவித்திருந்தார். இதனால், அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் அர்ஜூன் கபூரின் காதலியான மலைக்கா அரோராவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுயுள்ளது. இதனை மலைக்காவின் இளைய சகோதரி அம்ரிதா அரோரா உறுதிப்படுத்தி உள்ளார். அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். உடல்நலம் பெற்று வலிமையுடன் திரும்புவேன் என மலைக்கா அரோரா தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0