மாண்டஸ் புயல் பாதிப்பு… களத்தில் இறங்கிய ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் ; நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல்

Author: Babu Lakshmanan
10 December 2022, 11:27 am

சென்னை ; மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றினால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, ஆவின் பால் தடையின்றி கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், கடலோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!