10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு ; அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்

Author: Babu Lakshmanan
16 November 2023, 10:07 am
Quick Share

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2024ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியிடப்படும். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி முடிவடையும். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி முடிவடையும்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ம் தேதியும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படும், என தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மார்ச் 26 – தமிழ்
மார்ச் 28 – ஆங்கிலம்
ஏப்ரல் 1 – கணிதம்
ஏப்ரல் 4 – அறிவியல்
ஏப்ரல் 6 – விருப்ப மொழிப்பாடம்
ஏப்ரல் 8 – சமூக அறிவியல்

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
மார்ச் 04 – மொழிப்பாடம்
மார்ச் 07- ஆங்கிலம்
மார்ச் 12- இயற்பியல், பொருளியல்
மார்ச் 14 – கணினி அறிவியல், புள்ளியியல்
மார்ச் 18 – உயிரியல், தாவரவியல், வரலாறு
மார்ச் 21 – வேதியியல் , கணக்குபதிவியல்
மார்ச் 25 – கணிதம், வணிகவியல்
செய்முறை தேர்வுகள்: பிப்., 19 to பிப்.,14 வரை

12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மார்ச் 1 – மொழிப்பாடம்
மார்ச் 5 – ஆங்கிலம்
மார்ச் 8 – கணினி அறிவியல், உயிரியல், புள்ளியல்
மார்ச் 11 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
மார்ச் 15 – இயற்பியல், பொருளாதாரம்

மார்ச் 19 – கணிதம், வணிகவியல்
மார்ச் 22 – உயிரியல், வரலாறு

Views: - 246

0

0