சொல்ல வார்த்தையே இல்லை… பேட்டிங் செய்யும் போது என் மனதில் ஓடியது இதுதான் ; சச்சின் சாதனையை முறியடித்த பிறகு கோலி உடைத்த ரகசியம்..!!!

Author: Babu Lakshmanan
16 November 2023, 8:53 am
Quick Share

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் கோலி, ஸ்ரேயாஷ் ஐயரின் அபார பேட்டிங் மற்றும் முகமது ஷமியின் அசத்தலான பவுலிங்கால், இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது.

சிறப்பாக ஆடிய விராட் கோலி 113 பந்துகளில் 117 ரன்கள் குவித்து அணியின் ரன் குவிப்பிற்கு கைகொடுத்தார். இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், 50வது சதத்தை விளாசி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். அதுமட்டுமில்லாமல், ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை (700+) விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பல்வேறு சாதனைகளை படைத்த கோலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதனிடையே, போட்டியின் நடுவே கோலி பேசியதாவது :- இதையெல்லாம் பார்க்கும் போது கனவு போல் உள்ளது. இந்த தொடரில் எனக்கு கொடுக்கப்பட்ட ரோலில் விளையாடினேன். இருக்கிறேன். நான் சிறப்பாக விளையாடிய போது, மற்ற வீரர்களாலும் சிறப்பாக விளையாட முடிந்தது. சிறந்த இலக்கை நிர்ணயம் செய்த நினைத்தோம். 330 முதல் 340 ரன்களை இலக்காக நிர்ணயிக்க திட்டமிட்டோம். ஆனால், ஸ்ரேயாஷ் ஐயர், கேஎல் ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் 400 ரன்களை நெருங்கி ரன் குவிக்கப்பட்டது. அதேபோல் சுப்மன் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறந்த தொடக்கம் கொடுத்தனர். அனைத்து வீரர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலை சிறப்பாக செய்துள்ளனர்

என்னை பொறுத்தவரை இந்திய அணி வெற்றிபெற வேண்டும். அதற்காக நான் என்னை செய்ய வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருக்கிறேன். ரன்கள் ஓட வேண்டுமா..? 2 ரன்கள் ஓட வேண்டுமா..? பவுண்டரி விளாச வேண்டுமா..? அனைத்தையும் செய்ய தயாராக உள்ளேன். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாட முயற்சித்து வருகிறேன்.

50வது சதம் விளாசியது கனவு போல் உள்ளது. அனுஷ்கா, சச்சின் இருவரும் இங்குதான் இருக்கிறார்கள். இதனை விளக்கமாக சொல்வதற்கு கடினமாக உள்ளது. அவர்கள் முன்னிலையில் நான் 50வது சதத்தை விளாசியது மகிழ்ச்சியளிக்கிறேன், என்று கூறினார்.

Views: - 160

0

0

Leave a Reply