மிகப்பெரிய ஊழலில் சிக்கிய பாஜக.. நஷ்டமான நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றது எப்படி..? அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!!

Author: Babu Lakshmanan
16 March 2024, 1:03 pm
Quick Share

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கையும் மாநில அரசின் பங்கையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பாஜக மிக பெரிய ஊழலில் சிக்கி உள்ளது. அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி உண்மைக்கு புறம்பான செய்திகளை பேசி வருவதை வழக்கமாக கொண்டு வருகிறார்.

2019 இல் தேர்தல் பத்திரமுறையை பாஜக கொண்டு வர முயற்சிக்கும் போது, இது லூட்டிங் கொள்ளையடிக்க கூடிய முயற்சி என்று ராகுல் காந்தி கூறினார். இது வெளிப்படை தன்மையை இல்லாமால் ஆக்கி விடும், தேர்தல் நடைமுறையை சீரழித்து விடும், ஊழலை ஊக்குவிக்கும் என்றும் கூறினார். அதை மீறி தேர்தல் பத்திர முறையை கொண்டு வந்து இன்றைக்கு கோடி கோடியாக பணத்தை பணக்காரர்களை மிரட்டி, அடிபணிய வைத்து பாஜக அரசு பணம் வாங்கி உள்ளனர்.

காண்ட்ராக்ட் மூலம் வரும் சலுகைகளை கொடுத்து பணத்தை பெற்று உள்ளனர். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை வாங்கி உள்ளனர். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் எப்படி பல கோடி கொடுத்திருக்கும். வருமான வரியினரிடம் இருந்து அவர்களை பாதுகாக்க நஷ்ட கணக்கை காட்ட வைத்தீர்களா? நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு வங்கியில் இருந்து பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்ய வைத்து அதற்கு கையூட்டாக பெற்றீர்களா? என்கிற கேள்விகள் எழும்புகிறது.

CAG அறிக்கையில் மிக தெளிவாக பல லட்சம் கோடி தவறு நடந்துள்ளது என்றனர். அதை மூடி மறைக்க சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு தேவையில்லாத பிரச்சனையை பேசி மக்களை திசை திருப்பி வருகின்றார் பிரதமர்.

நேற்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேசிய பிரதமர் மீனவர்களுக்கு பாதுகாப்பு என்று கூறினார். அவரை பார்த்து நேருக்கு நேராக ஒரு கேள்வியை கேட்கிறேன். சீனா, வட இந்தியாவில் 4 ஆயிரம் sq.கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்துள்ளது உங்கள் ஆட்சியில் என்று பல குற்றச்சாட்டுகள் வந்து இருக்கிறது. அதை வாய்மொழி மௌனியாக பார்த்தீர்களா?

10 ஆண்டு கால ஆட்சியில் உங்கள் அரசியல் சாதுரியத்தின் மூலமாகவோ, அல்லது மிகப் பெரிய இராணுவ கட்டமைப்பின் மூலமாகவோ, கச்சத்தீவை மீட்டு எடுக்க முயற்சி செய்தீர்களா? எந்த முயற்சியும் நீங்கள் செய்யவில்லை. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கையும், மாநில அரசின் பங்கையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எல்லாவற்றிலும் மாநில அரசின் பங்கு அதிகமானது. ஆனால் பெயர் மற்றும் ஒன்றிய அரசு என்பார்கள் என குற்றம்சாட்டினார்.

Views: - 203

0

0