அமைச்சர் செந்தில் பாலாஜியால் கோவை முன்மாதிரி மாவட்டமாக திகழ்கிறது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!!

Author: Babu Lakshmanan
9 December 2022, 2:32 pm
Quick Share

கோவை ; பிற மாவட்டங்களை காட்டிலும் கோவை முன்மாதிரி மாவட்டமாக திகழும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் அங்கி அணிவித்தல் மற்றும் தமிழ் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சுப்பிரமணியன் மற்றும் செந்தில் பாலாஜி கலந்து கொண்டனர். இவர்களுடன் மாவட்ட ஆட்சியர் மாநகர மேயர் மாநகர ஆணையாளர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் உள்ளிட்டவர் கலந்து கொண்டனர். வெள்ளை அங்கி அணிவித்தல் நிகழ்ச்சிக்கு பிறகு முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மேடையில் பேசியதாவது : கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பு ஏற்றவுடன் மற்ற மாவட்டங்களுக்கு எல்லாம் முன் மாதிரியாக கோவையில் செயல்பட்டு வருகிறார்கள். ரேக்கிங் செய்வதில் இருந்து முழுவதும் மாணவர்கள் மன நிலை மாற்றிக் கொண்டார்கள். இங்கு இரண்டாம் 3 ஆம் ஆண்டு மாணவர்கள் வெள்ளை அங்கிகளை கொண்டு வந்து தந்து இளையவர்களை வரவேற்றது சிறப்பு. தொலைபேசி வாயிலாக முதல்வர் மாண்டஸ் புயல் குறித்து செந்தில் பாலாஜி மற்றும் என்னிடம் தொடர்ந்து விசாரித்து கண்கணித்து வருகிறார்.

ஆண்டுக்கு 10825 பேர் தமிழகத்தில் மருத்துவம் படிக்க சேர்க்கப்படுகின்றனர். அதிகமான மருத்துவ கல்லூரியாக உள்ள மாநிலமும் தமிழகம் தான். மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவமனை அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

7.5% இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல்வர் மடிக்கணிணி விரைவில் வழங்குவார். மத்திய அரசு பூர்த்தி செய்து வர வேண்டிய 30 இடங்களில் 12 இடங்கள் மட்டுமே பூர்த்தி செய்துள்ளனர். 12 இல் 8 பேர் தமிழக மாணவர்கள். கல்வி திறனில் தமிழக மாணவர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர், எனக் கூறினார்.

தொடர்ந்து, மருத்துவத்துறை அமைச்சரின் மா சுப்பிரமணியம் கூறியதாவது :- தினமும் 3000 முதல் 5000 பேர் வரை புறநோயாளிகள் கோவை அரசு மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், 5 பணிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வார்டு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பெற மருத்துவ காரணங்கள் வழங்குதல், அறுவை சிகிச்சை அரங்கு, விபத்து மருத்துவ காரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் ஆகிய பகுதியில் சிடி ஸ்கேன் வசதி வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு 19 வகையான கட்டிடப் பணிகள் மற்றும் மருத்துவ உபகரண பணிகள் நிறைவுற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாண்டாஸ் புயல் தொடர்பாக முதல்வர் தீர்மானங்கள் எடுத்துள்ளார். புயலால் இன்றும், நாளையும் சென்னையில் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. மருத்துவம் சார்ந்த துறையினர் தயார் நிலையில் உள்ளனர். குழந்தைகளுக்கான மருத்துவ குறைவு இருந்தால் சரி செய்யப்படும், என தெரிவித்தார்.

Views: - 174

0

0