மலர் தூவி மேட்டூர் அணையை திறந்து வைத்த CM ஸ்டாலின்… பின்னர் செய்த காரியம்… கலாய்க்கும் எதிர்கட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
24 May 2022, 5:47 pm
Quick Share

மேட்டூர் அணையை திறந்து வைத்த போது முதலமைச்சர் ஸ்டாலின் செய்த செயல் எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 117.760 அடியாகவும், நீர் இருப்பு 89.942 டிஎம்சி அடியாகவும் உள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணை எந்த நேரத்திலும் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வழக்கமாக ஜுன் 12ம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணையை, மே 24ம் தேதியே திறக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, குறுவை சாகுபடிக்காக, இன்று மே 24-ல் குறுவை பாசனத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலினால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.சுதந்திர இந்தியாவில் மே மாதத்தில் மிக முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரை வரவேற்கும் விதமாக, முதலமைச்சர் ஸ்டாலின் தட்டில் வைக்கப்பட்டிருந்த மலர்களை எடுத்து, தண்ணீர் மீது தூவினார். இதேபோல, நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனும் மலர் தூவினர். அப்போது, அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள், புகைப்படம் எடுப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை மீண்டும் மலர் தூவுமாறு கேட்டனர்.

அதன்படி, மீண்டும் மலர் தூவிய முதலமைச்சர் ஸ்டாலின், பூவோடு சேர்த்து தட்டையும் தண்ணீரில் வீசியெறிந்தார். இதனை பார்த்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. ஆனால், எதிர்கட்சியினர் இதனை கிண்டடித்து வருகின்றனர்.

Views: - 330

0

0