பொய் பேசிக்கிட்டே தான் இருப்பாங்க… அவருக்கு புரிதலும் இல்ல.. பக்குவமும் இல்ல… அண்ணாமலை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு!!

Author: Babu Lakshmanan
24 May 2022, 6:11 pm
annamalai - senthil balaji - updatenews360
Quick Share

கரூர் : பொய் பேசுபவர்கள், எந்த பொய்யையும் அதிகமாக பேசலாம் என்றும், புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை என்று அண்ணாமலை குறித்த கேள்விக்கு கரூரில் பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கரூர் ஊராட்சி ஒன்றியம் மின்னாம்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் இந்த திட்டத்திற்காக வேளாண்மைத் துறைக்கு 27.2 லட்சமும், தோட்டக்கலை துறைக்கு 17.5 லட்சமும், வேளாண் பொறியியல் துறைக்கு 743.4 லட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசினார். அவர் பேசியதாவது:- பொய் பேசுபவர்கள் எந்த பொய்யையும் அதிகமாக பேசலாம். நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. பெட்ரோல், டீசல் விலையில் மத்திய, மாநில அரசுகளுக்கு சேர்ந்து வரக்கூடிய வருவாயில் பெறக்கூடிய வரியை மட்டும் குறைத்து விட்டு, நேரடியாக மத்திய அரசுக்கு வரக்கூடிய வருவாயில் எந்த வரியையும் குறைக்கவில்லை.

அதை மறைத்து, மறந்து அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை. புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை. பாஜகவின் மாநில தலைவர் என்பதை காட்டிக் கொள்வதற்காக அடிக்கடி இவ்வாறு பேசுகிறார், என்று தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் விவசாயிகளின் நண்பன், குடிமராமத்து நாயகன் என்று பேசி வந்தனர். 5 லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருந்தனர். ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது, என்று தெரிவித்தார்.

Views: - 570

0

0