அண்ணா பல்கலை., இல்ல…. இனி உதயண்ணா பல்கலை., : உதயநிதிக்கு புதிய பொறுப்பு : விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!

Author: Babu Lakshmanan
13 September 2021, 6:21 pm
stalin-udhayanidhi-updatenews360
Quick Share

திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று போட்டியிட்டு, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் உதயநிதி. ஸ்டாலினின் மகன் என்பதால், புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, அவருக்கு வேறு ஏதேனும் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டு வந்தது.

Udhayanithi Stalin- Updatenews360

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பை வழங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி அடுத்த 3 ஆண்டுகளுக்கு அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி செயல்படுவார்.

அதேபோல, பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோரும், அண்ணாமலை பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சிந்தனை செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பு வழங்குவதன் மூலம் வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். மேலும், நெட்டிசன்கள் திமுக அரசின் இந்த செயலை விமர்சித்து வருகின்றனர். அதாவது, அண்ணா பல்கலைக்கழகம் இல்லை, இனி உதயண்ணா பல்கலைக்கழகம் என்று தான் அழைக்க வேண்டும் என்று கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 276

0

0