இதுக்கு போயி இப்படி அடிப்பதா..? 19 வயது பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய உடன்பிறப்புகள் (அதிர்ச்சி வீடியோ)

5 July 2021, 11:57 am
Quick Share

போபால்: கணவனின் வீட்டை விட்டு வெளியே வந்த இளம்பெண்ணை தந்தை மற்றும் சகோதரர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூரில் உள்ள பிபல்வா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவரின் தலை முடியை பிடித்து இழுத்து, மரத்தில் கட்டி வைத்தும் கட்டை மற்றும் குச்சியால் கடுமையாக தாக்குகின்றனர். இந்த வீடியாவில் அழுவதை நிறுத்து..இனிமேல் திரும்பி வருவாயா..? என்று கூறியபடி தாக்கப்படுவது தெரிய வந்தது.

ஒருபெண் இப்படி படுமோசமாகவும், கொடூரமாகவும் தாக்கப்படுவதை யாரும் தடுக்க முன்வரவில்லை. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், பெண்ணை தாக்கியவர்கள், அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும், இந்த பெண்ணிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், அவர் தனது கணவர் வீட்டை வெளியேறி பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் தந்தையும் சகோதரர்களும் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

பெண் தாக்குதலுக்கு உள்ளான வீடியோ வைரலானதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார், அப்பெண்ணின் தந்தையையும் சகோதரர்களையும் கைது செய்துள்ளனர்.

பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்களாக உருவெடுத்து வரும் இந்த காலகட்டத்தில், கணவன் வீட்டை விட்டு பெண் ஒருவர் வெளியேறுவது நமது சமூகத்திற்கு சரியானது இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர் எதற்காக… ஏன் இப்படி செய்தார் என்று கேட்காமல் இதுபோன்று நடந்து கொள்வதை ஏற்க முடியாது என்றே அனைவரும் கூறுகின்றனர்.

Views: - 135

0

0