நீட் விவகாரம் : கூட்டத்தை புறக்கணித்தோம்… ஆனா, எங்க நோக்கம் ஒன்றுதான்… முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கடிதம்!!

Author: Babu Lakshmanan
5 February 2022, 1:55 pm

சென்னை : நீட் விலக்கு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் விலக்கு கோரி தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பாஜக, அதிமுக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

இந்த நிலையில், நீட் தேர்வில் விலக்கு பெறுவதில் அரசின் நடவடிக்கைக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது :- தங்களின்‌ 3:2:2022 நாளிட்ட கடிதம்‌ கிடைக்கப்‌ பெற்றேன்‌. அதில்‌, மருத்துவக்‌, கல்வியில்‌ சேருவதற்கான நீட்‌ தேர்வில்‌ இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும்‌ சட்ட முன்வடிவினை மறுபரிசீலனை செய்யும்‌ பொருட்டு, மேதகு ஆளுநர்‌ அவர்கள்‌ தமிழ்‌ நாடு அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில்‌, இது தொடர்பாக 5.2:2022 அன்று காலை 11 மணியளவில்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌ உள்ள நாமக்கல்‌ கவிஞர்‌ மாளிகையின்‌ பத்தாவது தளத்தில்‌ உள்ள கூட்ட அரங்கில்‌ நடைபெற இருக்கும்‌ சட்டமன்ற அனைத்துக்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ கூட்டத்தில்‌ பங்கேற்று ஆலோசனை வழங்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ சட்டமன்ற உறுப்பினரை அனுப்பி வைக்குமாறு தாங்கள்‌ கோரி உள்ளீர்கள்‌.

“நீட்‌ தேர்வு ரத்து” குறித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌. கழகத்தின்‌ கருத்துகள்‌ ஏற்கெனவே தமிழ்‌ நாடு சட்டமன்றப்‌ பேரவையிலும்‌, 8.12.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ கூட்டத்திலும்‌ விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தைப்‌ பொறுத்தவரை தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்‌ என்பதில்‌ உறுதியாக உள்ளது. எனவே, நீட்‌ தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும்‌ அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ ஆதரிக்கும்‌ என்பதைத்‌ தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!