இளங்கலை நீட் தேர்வு ரிசல்ட் தேதி அறிவிப்பு… இந்த மாத இறுதிக்குள் விடைக்குறிப்புகளும் வெளியிடுவதாக தகவல்..!!!

Author: Babu Lakshmanan
26 August 2022, 10:07 am
Cbe Neet Exam- Updatenews360
Quick Share

கடந்த ஜுன் மாதம் நடந்த இளங்கலை நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜுன் 17ம் தேதி இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 497 நகரங்களில் 3,500க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடந்த இந்தத் தேர்வை, 18 லட்சத்திற்கு அதிமான மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வரும் ஆக.,30ம் தேதிக்குள் வெளியாகும் என்றும், http://neet.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியான பிறகு, தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 148

0

0