நீட் ரொம்ப முக்கியம் பிகிலு.. கட்சி கொள்கையை காற்றில் பறக்க விட்ட காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2022, 10:41 am
Karthi Chidambaram - Updatenews360
Quick Share

நீட் தேர்வின் காரணமாகத் தான் சாமாணியர்களின் குடும்பங்களில் இருந்தும் மாணவர்கள் மருத்துவம் படிக்கத் தேர்வாகிறார்கள் என சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மாணவர்களிடையே பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எம். பி நிதியில் கட்டப்பட்ட புதிய கலையரங்கக் கட்டிடத் திறப்பு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் கலையரங்கத்தை திறந்து வைத்த பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது பேசிய அவர், தேர்வு, டியூசன் உள்ளிட்ட பாட முறைகள் மீது தனக்கு ஒரு வெறுப்பு இருப்பதாகவும் இது குறித்து தான் மேடையிலேயே பேசி விடுவதால் அடுத்த முறை தன்னை பள்ளி விழாக்களுக்கே யாரும் அழைப்பதில்லை எனவும், மாணவர்கள் தேர்வு குறித்தெல்லாம் கவலைப் பட வேண்டாம் என கலகலப்பாக பேசினார்.
எம்பியின் இந்த பேச்சிற்கு மாணவர்கள் மத்தியில் கடுமையான வரவேற்பு இருந்தது. கரகோஷங்கள் எழுப்பி உற்சாகத்தை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.

மேலும் பேசிய அவர், நீட் தேர்வின் காரணமாகத்தான் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த வசீகரன் என்ற மாணவர் மருத்துவம் படிக்கச் சென்றுள்ளார்.

நீட் தேர்விற்கு முன்னர் சாமானிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் மருத்துவப் படிப்பிற்குச் சென்றதில்லை, நீட் தேர்வு நடத்தப்பட்ட பிறகு தான் சாமாணிய மாணவர்களும் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகி வருகின்றனர்.

நீட் குறித்து மேடைகளில் பேசுபவர்களுக்கு நீட் தேர்வு குறித்த புரிதல் இல்லை எனவும் விமர்சித்தார்.

Views: - 266

0

0