ஆண்டுதோறும் கப்பலோட்டிய தமிழன் விருது… கோவையில் வ.உ.சி.க்கு முழு திருவுருவச் சிலை : சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Author: Babu Lakshmanan
3 September 2021, 11:38 am
CM stalin - VOC - updatenews360
Quick Share

சென்னை : தமிழக அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனாரின் பெயரில் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இன்றைய நாள் கூட்டத்தின் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

அதாவது, அயோத்திதாசரின் 175ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். அதேபோல, தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை ‘வ.உ.சிதம்பரம் சாலை’ என அழைக்கப்படும். கோவை வ.உ.சி. பூங்காவில் அவருக்கு முழு உருவச்சிலை அமைப்படும். வ.உ.சிதம்பரனாரின் பெயரில் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும்.

வ.உ.சி. எழுதிய புத்தகங்கள் புதுக்கப்பட்டு பாடநூல் கழகம் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சிதம்பரனார் பெயரில் புதிய ஆய்வருக்கை அமைக்கப்படும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டுக்கு கட்டப்படும் அரசு கட்டிடங்களுக்கு வ.உ.சி. பெயர் சூட்டப்படும், என தெரிவித்தார்.

Views: - 415

0

0