நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை… சாட்டை முருகன் வீடு சுற்றி வளைப்பு ; தமிழகத்தில் பரபரப்பு

Author: Babu Lakshmanan
2 February 2024, 10:30 am
Quick Share

சென்னை ; தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாத செயல்களை தடுப்பது மற்றும் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெறுவது போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கும் செயலில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளில் என்ஐஏ மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளின் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த ரெய்டு நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நெருங்கிய நண்பரும், பிரபல யூடியூப்பருமான சாட்டை துரைமுருகனின் திருச்சி சண்முகா நகரில் உள்ள வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நாம் தமிழர் கட்சசியின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதேவேளையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக்கிற்கு நேரில் ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது.

Views: - 233

0

0