சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை… முதலமைச்சர் எடுத்த திடீர் முடிவு : கட்சி தாவ எம்எல்ஏக்கள் முடிவு?!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2023, 2:29 pm
Party
Quick Share

சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை… முதலமைச்சர் எடுத்த திடீர் முடிவு : கட்சி தாவ எம்எல்ஏக்கள் முடிவு?!!

ஆந்திரா சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை ஆந்திராவில் பெரும்பாலான இடங்களை ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிதான் கைப்பற்றும் என்கின்றன இதுவரையிலான கருத்து கணிப்புகள்.

அதேநேரத்தில் ஆந்திரா சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் சவால்களை எதிர்கொள்ளக் கூடும் எனவும் கூறப்படுகிறது. ஆந்திராவைப் பொறுத்தவரையில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் இடையேதான் கடும் போட்டி.

தெலுங்கு தேசம் கட்சியும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவும் கூட்டணி அமைத்துள்ளன. இன்னொரு பக்கம் பவன் கல்யாணின் ஜன சேனா, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ப்பதில் பாஜக ரொம்பவே தயக்கம் காட்டுகிறது.

ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரான முதல்வர் ஜெகன் மோகன், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கு தீவிரமான வியூகங்களை வகுத்துள்ளார். முதலில் 20 முதல் 30 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் சீட் தரப்போவதில்லை என ஜெகன் முடிவெடுத்திருந்தார்.

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பெரும்பாலான சிட்டிங் பிஆர்எஸ் எம்.எல்.ஏக்கள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டியும் தமது வியூகத்தை உக்கிரப்படுத்தி இருக்கிறார். சிட்டிங் எம்.எல்.ஏக்களில் வெற்றி பெறவே முடியாதவர்கள், வெற்றி பெறப் போராடுகிறவர்கள் என கணக்குப் போட்டு மொத்தம் 82 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாது என தகவல் அனுப்பிவிட்டாராம் ஜெகன் மோகன்.

அதே நேரத்தில் சீட் கிடைக்காத சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வேறு சில பொறுப்புகளும் தரப்படும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி உறுதி அளித்திருக்கிறாராம்.

ஆனாலும் இதனை ஏற்க மறுக்கிற 20க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவியாவது தேர்தலில் போட்டியிடலாம் என முடிவில் இருக்கின்றனர். தெலுங்கானாவில் கட்சி நடத்தும் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா விரைவில் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைய உள்ளனர்.
ஷர்மிளாவுடன் இணைந்து காங்கிரஸுக்கு தாவுவது என 15 முதல் 18 ஜெகன் கட்சி சிட்டிங் எம்.எல்.ஏக்கள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு சிலர் பாஜக பக்கம் தாவினால் சீட் கிடைக்கும் என நம்புகின்றனராம்.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அதிரடி முடிவு ஒவ்வொரு நாளும் ஆந்திரா அரசியலில் பரபரப்பை அதிகரிக்க வைக்கிறது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.

Views: - 190

0

0