எந்த பயனும் இல்ல… முதலமைச்சர் வேஸ்ட் : I.N.D.I.A கூட்டணி குறித்து டார் டாராக கிழித்தெடுத்த பிரசாந்த் கிஷோர்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2023, 9:15 am
PK - Updatenews360
Quick Share

லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த “இந்தியா” கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் உட்பட மொத்தம் 26 கட்சிகள் தற்போது வரை இடம்பெற்றுள்ள்ன.

பீகார் தலைநகர் பாட்னா, கர்நாடகா தலைநகர் பெங்களூரில் “இந்தியா” கூட்டணி கூட்டங்கள் நடைபெற்றன. பெங்களூர் கூட்டத்தில்தான் “இந்தியா” கூட்டணி என்ற பெயர் உருவாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து “இந்தியா” கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நாளையும் நாளை மறுநாளும் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற உள்ளது. மும்பை “இந்தியா” கூட்டணி கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதேபோல “இந்தியா” கூட்டணியின் மும்பை கூட்டத்தில் நாளை அணியின் லோகோ- சின்னமும் கொள்கை முழக்கமும் வெளியிடப்பட உள்ளது. மேலும் “இந்தியா” கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிக்கப்படலாம் என்கிற தகவலும் வலம் வருகிறது.

இதனிடையே “இந்தியா” கூட்டணி கூட்டம் குறித்து தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் பேசும் போது, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “இந்தியா” கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது. சொந்த மாநிலத்தில் எந்த ஆதரவும் இல்லாதவர் நிதிஷ்குமார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி, தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் குறைந்தபட்சம் 20,25 எம்.பிக்களை தங்கள் வசம் வைத்திருப்பவர்கள். ஆனால் நிதிஷ்குமார் நிலைமை அப்படி இல்லை.
எந்த பலமுமே இல்லாத நிதிஷ்குமாரை “இந்தியா” கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமித்தால் எப்படி சரியாக வரும்?. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Views: - 378

0

0