‘மழையோடுதான் தீபாவளி கொண்டாட்டம்’ : 11ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு

9 November 2020, 2:15 pm
rain tn - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் வரும் 11ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தினால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 11ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வரும் நவ., 11ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களான சென்னை முதல் நாகை வரை கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் மாதத்தில் 2வது பாதியில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஒட்டப்பிடாரம், வீரகனூர், செங்கோட்டையில் தலா 4 சென்டி மீட்டர் மழையும், கூடலூரில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. கடந்த 9 நாட்களில் மழை பொழிவு இயல்பை விட 44% குறைவாக பதிவாகியுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 20

0

0