அரசு போக்குவரத்து ஊழியர் அடித்துக்கொலை… குற்றவாளிகளை பிடிக்காமல் சடலத்தை அடக்கம் செய்ய அவசரம் ஏன்..? திமுக அரசுக்கு சீமான் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
26 January 2024, 2:13 pm
Quick Share

அரசுப் போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க அவசரம் காட்டாத அரசு, சடலத்தை புதைக்க அவசரம் காட்டியது ஏன்? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பாதிரியார் வீட்டில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட அரசு போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார் இல்லத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது மனைவி ஜெமினி குழந்தைகள் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து பேசினார். பின்னர் 2 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- சேவியர் குமார் அநீதியை அக்கிரமத்தை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய போராளி. இது திட்டமிட்ட கொலை. பேச்சுவார்த்தைக்கு அழைத்து அடித்து கொலை செய்வது வன்மம். தொல்லை இருந்தால் வழக்கு தொடர்ந்து காவல்துறை மூலம் சட்டபடி நடவடிக்கை எடுத்திருக்கலாம். வரவைத்து கொலை பண்ணுவதுதான் முடிவா..?

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஊக்கத்தொகை கேட்டால் மிரட்டி கேட்பது போல் கூறுகிறார்கள். கள்ள சாராயம் குடித்து செத்தவனுக்கு பத்து லட்சம் மிரட்டிதான் வாங்கினார்களா?, எனவும் கேள்வி எழுப்பினார்.

உங்க கட்சி ஆட்களை பாதுகாக்க துடிக்கிறீர்கள். அப்ப இது திராவிட முன்னேற்ற கழக நாடு, இந்த கட்சிக்கான அதிகாரம். அப்படிதானே, பொதுவான மக்கள் பாதிக்கப்பட்டால் அதை பிரச்சனையாகவே எடுத்து கொள்வதில்லை. எங்க அதுக்கு கவனம் செலுத்துகிறீர்கள். கொலை நடந்திருக்கிறது, உண்மையான குற்றவாளியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமா..? இல்லையா..? குற்றவாளிகளை பிடிக்க அவசரம் காட்டாத அரசு சடலத்தை புதைக்க அவசரம் காட்டியது ஏன்?

அத்துமீறி அதிகார திமிர்ல நடக்ககூடிய வேலைகள் எதிர்காலத்தில் அதிகாரம் மாறினால் என்ன நடக்கும் யோசித்து பார். கொலை செய்தவன் மேல வழக்கு போட்டு உள்ள வை என்று போராடினால், நீதிகேட்டு போராடியவர்கள் மீது வழக்கு போடுற எந்த நாட்டுல இது நடக்கும் என்றும் கூறினார்.

Views: - 663

0

0