கொரோனாவை விட கொடிய வைரஸ் திமுக : விரைவில் அரசியலை விட்டு விரட்டுவோம் : பொதுக்குழுவில் ஓபிஎஸ் சூளுரை..!!!

9 January 2021, 5:54 pm
Quick Share

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றியதற்கு பிறகு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது :- இந்த ஆண்டில் தமிழகத்தில் புதிய புரட்சி உருவாகும். 2020ல் கொரோனாவை என்னும் கொடிய வைரஸை விரட்டினோம். இந்த தேர்தலில் கொரோனாவை விட மோசமான வைரஸான திமுகவை அரசியலை விட்டே விரட்ட வேண்டும். அதிமுக இயக்கத்தை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது. அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக முடியும். திமுக செய்த துரோகங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இங்கே யாரும் யாருக்கும் அடிமை கிடையாது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தான்.

அதிமுக ஒரு எஃகு கோட்டை. அதனை யாராலும் அசைக்க முடியாது. எங்கோ இருந்த நம்மை, இங்கு கொண்டு வந்து சேர்த்த ஜெயலலிதாவிற்கும், அதிமுகவிற்கும் நன்றிக்கடன் செய்ய வேண்டும். வெற்றியை இலக்காக வைத்து செயல்பட வேண்டும்.

அதிமுகவில் வேஷ்டி கட்டும் ஆண்கள்தான் இருக்கிறார்கள். கோஷ்டி சேர்க்கும் ஆட்கள் கிடையாது. எனக்கு வேண்டாம், கட்சிக்கு விஷ்வாசமாக இருங்கள். எந்த கட்சியிலும் இல்லாத சுதந்திரம் இங்கிருக்கிறது, வெற்றியை குறிக்கோளாக கொண்டு மட்டுமே செயல்பட வேண்டும், என்றார்.

Views: - 0

0

0